ஹஜ் 2023 க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 10

Share this News:

புதுடெல்லி (12 பிப் 2023): ஹஜ் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10 ஆகும். என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆவணங்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பிப்ரவரி 10, 2023 முதல் தொடங்கியது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை hajcommittee.gov.in/haf23 என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

பிப்ரவரி 6 ஆம் தேதி சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை அறிவித்தது, அதன் கீழ் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக கிடைக்கின்றன மற்றும் ஒரு யாத்ரீகரின் பேக்கேஜ் செலவு ரூ 50,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஹஜ் கொள்கையின்படி, “பெண்கள், கைக்குழந்தைகள், மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என ” என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் கூறியுள்ளது.

ஹஜ் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும்.


Share this News:

Leave a Reply