டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி – இன்றும் ஒரு துப்பாக்கிச் சூடு!

Share this News:

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக், ஜாமியா பல்கலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லி ஜாஃப்ராபாத் துணிக் கடை ஒன்றின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்து வந்த அவர்கள்,  தொடர்ந்து நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். காயம் அடைந்தவர்கள் குறித்து கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாக வில்லை.

டெல்லியில் நாளை (08 ஆம் தேதி) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது வேட்பாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை முற்றிலும் செயலிழந்து இருப்பதை தொடர் துப்பாக்கிச் சூடுகள் காட்டுகின்றன.

ஏற்கனவே டெல்லி ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் மீதும், ஜாமியா மில்லியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியும் மத்திய அரசின் மீது அதிருப்தியும் அதிகரித்துள்ளது.


Share this News:

Leave a Reply