குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டம்!

Share this News:

கோவா (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவா சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமியர்களை குறி வைத்து இயற்றப் பட்டுள்ள இந்த சட்டத்திற்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதில் குறிப்பாக கிறிஸ்தவர்களும் அடக்கம். கோவா கத்தோலிக் சர்ச்சில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. CAA, NRC மற்றும் NPR ஐ எதிர்த்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply