ஷவர்மா சாப்பிட்ட மூவருக்கு வாந்தி பேதி காய்ச்சல்!

Share this News:

இடுக்கி (7 ஜன 2023): கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு உணவு விஷம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் ஜனவரி 1ம் தேதி நடந்தது. ஷவர்மா சாப்பிட்ட ஏழு வயது குழந்தை, வீட்டுத் தலைவி மற்றும் வயதான பெண் மூவருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஷவர்மா விற்ற நெடுங்கண்டில் உள்ள கேமல் ரெஸ்டோவில் சுகாதாரத் துறையினர் நடத்திய சோதனையில், சுகாதாரமற்ற நிலையில் ஓட்டல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் செய்தி வெளியானதையடுத்து, ஹோட்டலை மூடுமாறு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply