திருமண விருந்தில் கறி கிடைக்காததால் ரணகளமான திருமண நிகழ்ச்சி – வீடியோ!

Share this News:

பாக்பத் (14 பிப் 2023): கல்யாண வீட்டில் எப்போது எதற்காக சண்டை வரும் என்று சொல்ல முடியாது.

பப்படம் தீர்ந்து போவது, கோழியின் லெக் பீஸ் கிடைக்கவில்லை என பிரச்சனை செய்வது, பிடித்தமான பாடல் ஒலிக்காமல் இருப்பது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளால் சண்டைகள் வரும்.

இப்படித்தான் உத்திரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஒரு சின்ன காரணத்தால் கல்யாண வீடு ரணகளமாகியுள்ளது.

திருமண பந்தலில் திருமண விருந்து பரிமாறப்பட்டபோது மணமகன் மாமாவுக்கு கறி கிடைக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், விருந்தினர்கள் ஒரு பக்கமாக எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் சண்டையிடுவதை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலு சண்டை அதிகரிக்காமல் இருக்க பெண்கள் முயன்றும் பலனில்லை. கம்பு மற்றும் பெல்ட் மூலம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கின்றனர்.

திருமணத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு பிடித்த பாடலை இசைக்காததால் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இறுதியாக காவல்துறையினர் வந்து நிலைமையை சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். அற்பமான விஷயங்களை மக்கள் அமைதியாக கையாள இயலாமை குறித்து பலர் தங்கள் கவலைகளை தெரிவித்தாலும், சிலர் அதை நகைச்சுவையாக எடுத்து வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply