டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ ட்விட்டரில் உண்மையில் பதிந்தது என்ன?

Share this News:

புதுடெல்லி (15 பிப் 2020): டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ அமானதுல்லா கான் ட்விட்டரில் பதிந்ததாக ஒரு பொய் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷஹின் பாக் பகுதி வேட்பாளர் அமானதுல்லா கான் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டரில், “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி” என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் சிலர் அந்த பதிவை போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்து, “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு வாக்களித்த ஷஹீன் பாக் முஸ்லிம்களுக்கு நன்றி. விரைவில் இந்தியா முழுவதும் இஸ்லாம் வெற்றி பெறும்” என்பதாக வைரலாக்கியுள்ளனர்.

ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று அமானதுல்லா மறுத்துள்ளார். மேலும் இது பொய்யான பதிவு என்பதை ALT நியூஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

மத மோதலை ஏற்படுத்தவும் அமானதுல்லா கான் மீது பழி சுமத்தவும் சில விஷமிகள் செய்த வேலை என்பதாகவே இது கருதப்படுகிறது.


Share this News:

Leave a Reply