முன்னாள் முதல்வரின் மகன் மர்ம மரணம்!

Share this News:

லண்டன் (12 பிப் 2020): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வரின் மகன் லண்டனில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வராக இருந்தவர் காங்கிரசைச் சேர்ந்த கலிக்கோ புல். இவரது மகன் ஷுபான்சோ புல் (20) என்பவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சசெக்ஸில் பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் இறந்து கிடந்துள்ளார்.

தற்போது ஷுபான்சு உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவரது தந்தையான கலிக்கோ புல் 2016-ல் சிறிது காலம் அந்த மாநில முதல்வராக பதவி வகித்தார். ஆனால் இவரது முதல்வர் நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது. அதையடுத்து கடந்த 2016-ஆம் வருடம் ஆகஸ்ட் 9, கலிக்கோ தனது நிதி விஹார் இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இப்போது அவரது மகனின் மரணமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply