குடியரசு தினத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

Share this News:

ஐதராபாத் (24 ஜன 2020): ஐதராபாத்தில் குடியரசு தினத்தன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அசாதுத்தீன் உவைசி தலைமையிலான United Muslim Action Committee (UMAC) சார்பில் ஐதராபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஹ்திஜாஜி முஷைரா (Ehtejaji Mushaira) மைதானத்தில் 25 ஆம் தேதி இரவு முதல் நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்துள்ளனர். பல்வேறு புகழ்பெற்ற உறுது கவிஞர்கள் பங்குபெறும் நாட்டுப் பற்று மிக்க கவிதைகள் வாசிப்பு, நாட்டுப் பற்று பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 26 ஆம் தேதி காலை தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்படும். இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு சார்மினார் பகுதியை நிகழ்ச்சி நடத்துனர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர். ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்படவே எஹ்திஜாஜி முஷைரா மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply