டெல்லி கலவரத்தில் 50 பேர் காயம் மேலும் இரு முஸ்லிம்கள் பலி!

Share this News:

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.

முதலில் தலைமை காண்ஸ்டபில் ரத்தன் லால் உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்தனர். பின்பு மேலும் மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதில் முஹம்மது ஃபுர்கான் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, ”தற்போது மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களை நாங்களே அப்புறப்படுத்துவோம் என்றும் போலீஸை கண்டுகொள்ள மாட்டோம் என்றும் எச்சரித்திருந்த நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply