டெல்லியில் பிப்ரவரி 8 ஆம் தேதி சட்டசபை தேர்தல்!

Share this News:

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “டெல்லி சட்ட்சபையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2020, ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்கள் உள்ளனர்.

டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலைமை செயலாளர், காவல்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். மூத்த குடிமக்களுக்கு வாகன வசதி செய்து தரப்படும்.

தேர்தலுக்காக 13,750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர்.” என்றார்.


Share this News:

Leave a Reply