அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

Share this News:

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் அஸ்ஸாம் தொடர்பைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதற்காக மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து எம்பி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் மெஸ்ஸி கிரீடத்தை வைத்திருக்கும் புகைப்படத்தையும் ட்வீட் செய்துள்ளார். ஆனால் பின்பு அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.


Share this News:

Leave a Reply