பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெளியேற்றம்!

Share this News:

ஐதராபாத் (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப் படுவதாகவும், தனது ஆதரவாளர்களை போலீசார் தாக்கியதாகவும் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

“தெலுங்கானாவில் சர்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. முதலில் எனது ஆதரவாளர்கள் லத்தியால் தாக்கப்பட்டனர். பின்னர் நான் கைது செய்யப்பட்டேன். தற்போது காவலர்கள் என்னை ஹைதராபாத் விமான நிலையம் அழைத்து வந்துள்ளனர். அவர்கள் என்னை டெல்லி அனுப்பி வைக்க உள்ளனர்”

இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அலுவலகத்திற்கும் அவர் டேக் (Tag) செய்துள்ளார்.

மேலும், “பகுஜன் சமாஜ் இந்த அவமானப்படுத்தலை ஒரு போதும் மறக்காது; விரைவில் நான் திரும்பி வருவேன்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply