ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

Share this News:

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது.

அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெளிநாடுகளில் நாட்டை அவமதித்ததாகக் கூறி ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய பாஜக கோரி வருகிறது

அதானி விவகாரத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற போராட்டங்களால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. வரும் நாட்களில், நாடாளுமன்ற காந்தி சிலை முன், போராட்டம் நடத்தப்படும் என எதிர் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆனால் அதானி உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவே ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க.நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது என காங்கிரஸ் கருதுகிறது. ராகுலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


Share this News:

Leave a Reply