ஷஹீன் பாக் இருக்கும் தொகுதியில் பாஜகவை டெபாசிட் இழக்க வைத்த அமானதுல்லா கான்!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் ஷஹீன் பாக், ஜாமியா பல்கலைக் கழகம் இருக்கும் தொகுதியில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் டெல்லியின் போராட்டக்களமாகியிருக்கும் ஷாஹின்பாக், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்திருக்கும் ஓக்லா தொகுதி. மக்கள் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கானை வெற்றி பெறச் செய்துள்ளனர்..

இத்தொகுதியில் அமானதுல்லா கான். 1,06,780 வாக்குகளைப் பெற்றுள்ளார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பரம்சிங் வெறும் 15,697 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இதன்மூலம் டெல்லியிலேயே மிக அதிகமாக 88,497 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெயரையும் அமானதுல்லா கான் பெற்றுள்ளார்.


Share this News:

Leave a Reply