குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் கட்சியிலிருந்து விலகல்!

Share this News:

போபால் (08 பிப் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச பாஜக தலைவர்களில் ஒருவரான உஸ்மான் பட்டேல் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லி ஷஹீன் பாக்கில் பெண்கள் கடுங் குளிரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். படேல். மேலும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில், மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவின் சிறு பான்மை பிரிவைச் சேர்ந்த 100க்கான உறுப்பினர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ராஜினாமா செய்துள்ள நிலையில் உஸ்மான் பட்டேல் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேலும் பலர் பாஜகவிலிருந்து விலகக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply