பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது!

Share this News:

புதுடெல்லி (20 செப் 2019): பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாமியார் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் சின்மயானந்த்கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சின்மயானந்த் அங்கம் வகித்தவர்.

பாதிப்புக்குள்ளான மாணவி, “என்னை வன்புணர்ந்த சாமியார் சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் உயிரை விட நேரிடும்” என்று கூறியிருந்த நிலையில் சின்மயாநந்த் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply