பாஜக மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவிய முதல்வர்!

Share this News:

திஸ்பூர் (08 அக் 2022): அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜக மூத்த தலைவர் ஒருவரின் கால்களைக் கழுவிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, பெரியவர்களுக்கு மரியாதை செய்வது பாஜகவின் பாரம்பரியத்தின் அடித்தளம் என்றும், மூத்த தலைவர்களின் கால்களைக் கழுவியதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கவுகாத்தியில் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


Share this News:

Leave a Reply