கேரளாவில் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

திருவனந்தபுரம் (02 பிப் 2020): கேரளாவில் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பல ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இதனையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவின் வூஹான் பல்கலையில் படித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேந்த மாணவி சொந்த ஊரு திரும்பினார். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், கொரோனா வைரசால் மாணவி பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, திருச்சூர் மருத்துவ கல்லூரியில் தனி வார்டில் வைத்து அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சீனா சென்று வந்த கேரளாவை சேர்ந்த மற்றொரு நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . இதனையடுத்து அவருக்கு தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..


Share this News:

Leave a Reply