நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடருமா? – அமித் ஷா பதில்!

Share this News:

பாட்னா (16 ஜன 2020): பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை பாஜக சந்திக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

“குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படமாட்டாது.

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம். ” என்றார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சிஏஏ குறித்து மத்திய அரசு மறுபரிசீசலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply