மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

Share this News:

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக பெண்கள் நுழைய தடை இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, வழிகாட்டுதல்கள் வழங்குவது சரியாக இருக்காது. இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத விவகாரங்களை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரும் விவகாரங்களில் நான் இணைய முடியாது என குறிப்பிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply