குஜராத்தில் ஏபிவிபி குண்டர்களின் அட்டூழியம் – மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

Share this News:

அஹமதாபாத் (07 ஜன 2020): அஹமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீதான தாக்‍குதலுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஏபிவிபி அலுவலகம் முன்பு SUCI எனப்படும் தேசிய மாணவர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது . ABVP அமைப்பினர் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்திய பயங்கர தாக்‍குதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த மோதல் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னொரு இந்துத்வா அமைப்பான இந்து ரக்ஷா தள் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply