போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

Share this News:

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார், தனது தந்தையுடன் ஆம்ஆத்மியில் இணைந்த போது எடுக்கப்பட்டது எனவும் கூறி உள்ளனர்

டில்லி போலீசாரின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆம்ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், இவை அனைத்தும் பா.ஜ.,வின் சதி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் போலீசார் செயல்படுகின்றனர். அமித்ஷா அனைத்து வகையான தந்திரங்கள் மற்றும் சதிகளை கையாண்டு வருகிறார். என்றார்.

மேலும் துணை கமிஷனர், பா.ஜ.க,வின் ஊதுகுழல் போல் செயல்படுகிறார். பா.ஜகவின்., செய்தி தொடர்பாளராக இருக்க வேண்டிய ராஜேஷ் தியோ, தவறுதலாக டிசிபி ஆகி இது போன்ற அறிக்கைகளை அளித்து வருகிறார். இத்தகைய பேச்சுக்களுக்காக அவருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்புவோம். தேர்தல் கமிஷனிடமும் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.


Share this News:

Leave a Reply