காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

Share this News:

ஸ்ரீநகர் (15 ஜன 2020): காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நவுகாம் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தார். .

மேலும் கண்டர்பால் மாவட்டம், சோனமார்க் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.


Share this News:

Leave a Reply