ரீல்ஸ் மோகம் – மூவர் பலி!

Share this News:

காஜியாபாத் (15 டிச 2022): உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரயில் தண்டவாளம் அருகே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 3 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் ஒரு இளம் பெண்ணும் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டனர்.

உ.பியைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சமூக வலைத் தளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக ஒரு த்ரில் வீடியோவை உருவாக்கும் ஆவல் ஏற்பட்டது.

இதனால் ரயில் அருகே வரும்வரை காத்திருந்து ரயிலுக்கு நெருக்கமாக நின்று வீடியோ எடுத்தனர். ஆனால், ரயில் நெருங்கும் முன் அவர்களால் தண்டவாளத்தில் இருந்து விலக முடியாமல் ரயில் மோதி பரிதாபமாக தூக்கி வீசப்பட்டனர்.

முசோரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லு கர்ஹி ரயில்வே கேட் அருகே காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply