முஸ்லிமாக தோன்றும் நடிகர் சிம்பு!

Share this News:

சென்னை (04 பிப் 2020): வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு முஸ்லிம் வேடத்தில்நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.


Share this News:

Leave a Reply