ஐயோ பாவம் தர்பார் சினிமா டீம்!

Share this News:

சென்னை (09 ஜன 2020): தர்பார் படம் வெளியான ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில், அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் “தமிழ் கன்” மற்றும் “தமிழ் ராக்கர்ஸ்” போன்ற தளங்களில் வெளியாகியுள்ளது.

முன்பு, விஜய்யின் “சர்கார்” திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்து காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தமிழ் திரைப்படத் துறைக்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை ரஜினி கொச்சைப் படுத்திய சம்பவம் சர்க்கார் குழுவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது அதுமட்டுமல்லாமல்  படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் நிலையில்  படம் இணையத்தில் வெளியாகி தர்பார் டீமை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


Share this News:

Leave a Reply