தர்பார் திரைப்பட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது!

Share this News:

மதுரை (16 ஜன 2020): தர்பார் திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மதுரையில் நேற்று முன்தினம் தர்பார் திரைப்படம் கேபிள் டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது கேபிள் டிவியில் ஒளிபரப்பிய லோக்கல் சேனல் உரிமையாளர் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Share this News:

Leave a Reply