ஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்!

Share this News:

பெரிய எதிர்பார்ப்பின்றி வரும் படங்கள் சில வேளைகளில் படம் வெளியான பிறகு பெரிதும் பேசப்படும் அந்த வகையில் பெரிய எதிர் பார்ப்பின்றி வெளியாகியிருக்கும் பட ஓ மை கடவுளே.

ஹீரோ அசோக் செல்வன், காமெடி நடிகர் சாரா, ஹீரோயின் ரித்திகா சிங் மூவரும் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி பருவம் கடந்து வாழ்க்கையிலும் நண்பர்கள்.

ஒரு காலகட்டத்தில் ரித்திகா மீது ஹீரோவுக்கு காதல் வருகிறது. இடையில் ஒரு கனவு, எதிர்காலத்தில் நடக்கப்போவதெல்லாம் அவருக்கு தெரிகிறது. இதற்கும் ஒரு சிறு கதை உண்டு. அது ஓரமாக இருக்கட்டும்.

இடையில் சீனியர் வாணி போஜன் மீதும் ஒரு காதல், ஆனால் அவருக்கு ஒரு சோகப்பின்னணி. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் ஹீரோவிற்கு. ஆனால் வீட்டில் எதிர்ப்பு. இதெல்லாம் நடக்கும் போதே ரித்தகாவுக்கு திருமண ஏற்பாடு.

கடைசியில் அசோக்கின் சினிமா ஆசை நிறைவேறியதா, காதல் கை கூடியதா, வாணியின் சோகப்பின்னணி என்ன என்பதே இந்த ஓ மை கடவுளே படத்தின் கதை.

ஹீரோ அசோக் செல்வன் தெகிடி படம் மூலம் நம் மனதில் இடம் பிடித்தவர். அவர் தற்போது நல்ல மெச்சுரிட்டி ஆகிவிட்டதை இந்த படத்தில் அவரின் நடிப்பே சொல்கிறது. குறும்பான நண்பராகவும், ஜாலியான கணவராகவும் அவர் இந்த படம் முழுக்க டிராவல் செய்கிறார்.

ஹீரோயின் ரித்திகா சிங், இறுதி சுற்று படம் மூலம் தன் திறமையை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். இப்படத்தில் சிறுபிள்ளை தனமான கேரக்டரில் கலக்கிறார். ஆனால் வாழ்க்கை என்று வந்ததும் சீரியஸாக நடித்து காட்டும் டிரான்ஸ்ஃபர்மேசனும் படத்தில் ரியல் பிளே.

குடும்பத்தில் சிக்கிவிட்டால் நண்பர்கள் சந்திப்பு என்பது அரிதான காரியம் என சூழ்நிலையை பதிவு செய்கிறார் சாரா. குழந்தை பெற்றுக்கொண்டால் கணவருடன் இருக்கும் நேரம் குறைந்துவிடுமோ என யோசிப்பவர்கள் மத்தியில் குழந்தை பெற்றுக்கொண்டாலும் ஒரு லவ் தானே கவுண்டர் கொடுத்து யோசிக்க வைக்கிறார். அவர் சொல்வதும் நிதர்சனம் தானே.

வாணி போஜன் நடிப்பும் சீரியஸ் சீக்குவன்ஸ். ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்ற கனவும், அதுவும் பண ஆதிக்கமும், ஆணாதிக்கமும் நிறைந்தவர்கள் பெண் சந்திக்கும் சூழ்நிலையையும், சினிமாவில் செகண்ட் சான்ஸ் கிடைக்கும் என கேட்கும் கேள்வியாலும் மனதை ஈர்க்கிறார்.

படத்தில் விஜய் சேதுபதிக்கு சில நிமிட ரோல் தான் ஆனால் முழுமையாக தெரிகிறார். முக்கிய விஷயங்களை பதிவு செய்கிறார். லல் கோர்ட் நியூ ஒர்க்கவுட். உடன் கம்பெனி கொடுக்கிறார் ரமேஷ்.

இயக்குனர் அஸ்வந்தின் முயற்சியும், லவ்வில் லாஜிக் பார்க்கக்கூடாது என அழுத்தமாக பதிவும் செய்வதும் தெளிவாக அமைந்துள்ளன. எனினும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

காதல் நினைவுகளை சொல்லும் இன்னொரு படம்!


Share this News:

Leave a Reply