காவி உடையில் ஆபாசம் – நடிகை தீபிகா படுகோனுக்கு அமைச்சர் கடும் எதிர்ப்பு!

Share this News:

புதுடெல்லி (15 டிச 2022): ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவுள்ள பாலிவுட் படத்தின் பெயர் “பதான்”.

இந்த படத்தில் “பேஷரம் ரங்” (வெட்கங்கெட்ட நிறம்) என்று தொடங்கும் முதல் பாடலை படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.

கவர்ச்சியான அந்த பாடலில் தீபிகா காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்துள்ளதை, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், பாடல் காட்சிகளை எடிட் செய்யாவிட்டால் படத்தின் வெளியீடு தடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தீபிகாவின் உடை ஆட்சேபணைக்கு உரியதாக இருப்பதாகவும், அசுத்தமான மனநிலையில் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளதாகவும் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.

தீபிகா ஆபாசமாக நடித்தது பிரச்னையா, அல்லது காவி உடை அணிந்தது பிரச்னையா? இவருக்கு வேறு வேலை இல்லையா? என மீம்ஸ் உருவாக்கி நெட்டிசன்கள் உள்துறை அமைச்சரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply