கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கரம் – மூவர் சாவு!

Share this News:

சென்னை (20 பிப் 2020): கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பூந்தமல்லி அடுத்த EVP பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.

கிரேனின் மேல் கட்டப்பட்டிருந்த ராட்சத லைட் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை இயக்குநர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply