மூன்றாக நொறுங்கிய விமானம் – 176 பயணிகள் உயிர் பிழைத்த அதிசயம்!

Share this News:

இஸ்தான்பூல் (06 பிப் 2020): துருக்கி விமானம் ஒன்று பயங்கர விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது.

பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது.

மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானம் உடைந்த பகுதி வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் 157 பேர் காயம் அடைந்துள்ளனர்,. விமான ஊழியர்கள் உட்பட 177 பேர் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply