நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

Share this News:

பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti Airlines Flight 691 விமானம், பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது.

மோசமான வானிலையே காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. விபத்தின்போது 68 பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர்.

இச் செய்தி வெளியாகும் சமயத்தில் விமானத்தில் பயணம் செய்த 45 சடலங்கள் வரை மீட்கப் பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 10 வெளிநாட்டு பயணிகளும் உள்ளதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply