இளம் பெண்ணை வன்புணர்வு செய்ததாக நீதிபதி மீது புகார்!

Share this News:

இஸ்லாமாபாத் (19 ஜன 2020): பாகிஸ்தானில் இளம் பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டதாக கீழ் நிலை நீதிமன்ற நீதிபதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிந்து மாகானத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியை, விவாகரத்து வழக்கு தொடர்பாக சந்திக்க வந்த ஒரு பெண்ணையே நீதிபதி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உரிய விசாரணைக்கு தலைமை நீதிபதி அஹமது அலி சேக் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப் பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அவர் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.


Share this News:

Leave a Reply