இந்திய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

Share this News:

கராச்சி: துபையிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி பயணித்த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் விமானம், அவசர கதியில் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

துபையிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி IX192 என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் விமானம் 14/10/2023 அன்று காலை வந்து கொண்டிருந்தது.

பாகிஸ்தான் மீது பறந்து கொண்டிருக்கும் போது, பயணி ஒருவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கோரினார்.

உரிய அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து விமானம் கராச்சி விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலைய மருத்துவர் குழு அப்பயணிக்கு அவசர மருத்துவ உதவி செய்து அவர் உயிரைக் காப்பாற்றினர்.

பயணிக்கு ஆபத்தில்லை என்பதை உறுதிபடுத்திய பின்னர் விமானம் அமிர்தரஸ் புறப்பட்டுச் சென்றது.

இச்சம்பவம் இரு நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: