நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

Share this News:

லண்டன் (08 பிப் 2020): நோயாளிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்ட இந்திய மருத்துவருக்கு, மூன்று ஆயுள் தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டனில் மருத்துவம் பயின்று அங்கேயே சிகிச்சை அளித்து வரும் இந்திய மருத்துவர் மனீஷ் நட்வர்லால் ஷா. இவர் மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக நோயாளிகள் மனீஷ் மீது குற்றம் சுமத்தினர் .

மேலும் பெண் நோயாளிகள் வந்தால் அவர்களிடம் மர்ம உறுப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் பயமுறுத்தியும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சில பெண்களிடம் மார்பக புற்று நோய் அறிகுறி உள்ளதாக கூறி சோதனையில் ஈடுபடுவதுபோல் பலமுறை சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப் பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

அதன்படி மனீஷ் மீது 90 வழக்குகள் பதிவான நிலையில், லண்டன் நீதிமன்றம் வெள்ளியன்று மனீஷுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


Share this News:

Leave a Reply