துபாய் கோர விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு!

Share this News:

துபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

துபாய்க்கு ஓமனிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் பலியாகியுள்ளனர். அதில் இறந்தவர்களின் இந்தியர்களின் எண்ணைக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக 8 இந்தியர்கள் பலியானதை இந்திய தூதரகம் உறுதி செய்த நிலையில் மேலும் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோன்புப் பெருநாள் விடுமுறையைக் கொண்டாட ஓமன் சென்றிருந்தவர்கள் ஓமனிலிருந்து துபாய் திரும்பி வரும்போது துபாய் முஹம்மது பின் சயீது சாலையில் பேருந்து விபத்துக் குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply