இந்திய குடியுரிமை சட்டம் குறித்து வங்கதேச பிரதமர் பதில்!

Share this News:

துபாய் (19 ஜன2020): இந்திய குடியுரிமை சட்டம் உள் நாட்டு விவகாரம் ஆனால் அது இப்போதைக்கு தேவையில்லாதது என்று வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேக் ஹசீனா, சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும், வங்கதேசத்திற்கு வரவில்லை. அதேபோல், வங்கதேசத்தில் இருந்து எந்த சிறுபான்மையினரும் இந்தியாவுக்கு செல்லவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைதான். ஆனால், தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply