அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி!

Share this News:

புளோரிடா (02 பிப் 2020): அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர் மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

விக்டரி நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிற்பகல் 2:30 மணியளவில் மர்ம நபர் திடீரென தனது துப்பாக்கியால் 13 முறை சுட்டார். இதில் ஒரு ஆண் மற்றும் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு சிறுமி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply