தற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)

Share this News:

சென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது.

இந்நிலையில் ரஜினியின் கருத்து குறித்து யூடூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த டாக்டர் ஷாலினிம், “ரஜினிக்கு பெரியார் குறித்து என்ன தெரியும்?. பிராமினை திருமணம் செய்த பிராமின் அல்லாத ரஜினி அவரது குழந்தைகளை சண்டாளி என்றுதான் பிராமின்கள் அழைப்பர். அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரே.” என்றார்.

மேலும் “நாட்டில் பல விவகாரங்கள் இருக்க, விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ள ரஜினி, மக்களுக்காக என்ன செய்தார்? எதையும் செய்யாமல் தேவையில்லாத விவகாரத்தை இப்போது கிளப்ப என்ன காரணம்? பின்னால் அவரை யாரோ இயக்குகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

முழு வீடியோ

 

வீடியோ நன்றி: Red Pix


Share this News:

Leave a Reply