பிளஸ்டூ வினாத்தாள் கசிவு – விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

சென்னை (15 பிப் 2022): பிளஸ் டூ திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12 ஆம் வகுப்பு உயிரியல்…

மேலும்...

பிளஸ் டூ மாணவர்கள் வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு!

ராஜமுந்திரி (05 டிச 2020): ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிளஸ் டூ வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன், மாணவியின் கழுத்தில் தாலி காட்டினார்.. மற்றொரு நண்பர் அதை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் நவம்பர் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பின்பே இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. ‘அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியது யார் என்பது…

மேலும்...

மீண்டும் நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு!-ஏராளமான மாணவர்கள் மறுபடியும் ஆப்சென்ட்!

சென்னை (28 ஜூலை 2020): 327 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்று பிளஸ் டூ மறு பொதுத்தேர்வு நடைபெற்றது. பிளஸ்-டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள்(மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை)…

மேலும்...

பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால், சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள்களை திருத்தவும், மையங்களில் நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் திருத்துபவர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை…

மேலும்...

பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் 20-ல் திட்டமிட்டபடி தொடங்கும் – பள்ளி கல்வித்துறை!

சென்னை (20 மார்ச் 2020): பிளஸ் டூ பொதுத் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வில் மாற்றம் எதுவும் வரலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும்…

மேலும்...