பிளஸ் டூ மாணவர்கள் வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு!

ராஜமுந்திரி (05 டிச 2020): ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிளஸ் டூ வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன், மாணவியின் கழுத்தில் தாலி காட்டினார்.. மற்றொரு நண்பர் அதை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் நவம்பர் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பின்பே இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. ‘அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கல்லூரி பாதுகாப்பு காவலரிடம் கூறி வகுப்பறைக்குள் யாரெல்லாம் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணம் செய்துகொண்ட மாணவர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் பள்ளி விவாகம் நீக்கியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply