ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து தெஹ்ரான் பயணம்!

மாஸ்கோ (05 செப் 2020): மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை…

மேலும்...

ஈரான் விமான விபத்தில் பயணிகள் அனைவரும் பலி!

தெஹ்ரான் (08 ஜன 2020): உக்ரேன் விமான விபத்தில் பயணம் மேற்கொண்ட 176 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பயணிகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்...

ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

ஈரான் (08 ஜன 2020): ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. 180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம், இரானின் தெஹ்ரானுக்கு அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாக வில்லை.

மேலும்...