தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமைய்யா தாஸ் (51). பாஜக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில், தென்திருப்பேரை கோனார் தெருவைச் சேர்ந்த இசக்கி (25) என்பவரின் மாடுகள் மேய்ந்துள்ளது. இதனை ராமையா தாஸ் தட்டிக் கேட்டதால்…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி!

தூத்துக்குடி (27 ஜூன் 2020): தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளி கணேச மூர்த்தி நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை. போலீசார் அவரை தாக்கியதே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உரிய விசரணை நடத்தக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போலீசார் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர்விஜயா ஆகியோர் குடும்பத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

மேலும்...

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையும் காவல்துறையின் தகிடுதத்தங்களும்!

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. “காவலர்களை திட்டிவிட்டு தந்தை, மகன் (பென்னீஸும், ஜெபராஜூம்) தரையில் உருண்டு புரண்டு ஆர்பாட்டம் செய்தனர். அதில் அவர்களுக்கு ஊமைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டக்காரர்கள் மீது அரசு அதிகாரத்தின் மூலம் பெரும் இனப்படுகொலை நடந்தது யாரும் எளிதில் மறந்துயிருக்க மாட்டோம், அப்போது காவல்துறை அறிக்கைக்கு முன்பே தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சமூக விரோதி ஊடுருவியதால்…

மேலும்...

முதல் நாள் மகன் மரணம், அடுத்த நாள் தந்தை மரணம் – போலீஸ் மீது மக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி (23 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் மகன் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்துவிட அடுத்த நாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதி பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை…

மேலும்...

மக்களைப் பற்றி சிந்திப்பவர்களைதான் மக்களும் சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின்!

தூத்துக்குடி (16 பிப் 2020): மக்களைப் பற்றி சிந்திப்பவர்களைத்தான் மக்களும் சிந்திக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி பெரியசாமி பேரன் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது, மேலும் தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் தி.மு.க.வுக்கு தூணாக, தலைவர் கலைஞரின் முரட்டு பக்தனாக விளங்கிய பெரியசாமியின் பேரன் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி இது. பெரியசாமி இயக்க தோழர்களோடு இணைந்து, பிணைந்து அவர் செய்துள்ள பணிகளை எல்லாம் நாம் இன்றும் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால்தான்…

மேலும்...