1971 இந்தியா பாகிஸ்தான் போர் – இந்தியாவின் வெற்றிக்கதை!

1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளின் நினைவு தினம் இன்று. விஜய் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும் இன்றைய தினம், இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் தைரியத்தை குறிக்கிறது. 51 ஆண்டுகளுக்கு முன், இந்தப் போரின் வெற்றி, பங்களாதேஷ் என்ற புதிய தேசத்தின் பிறப்பையும் குறிக்கிறது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிழக்கு பகுதியில் தொடங்கிய மனித உரிமை இயக்கம் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வழிவகுத்தது. ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா தலைமையிலான இந்திய…

மேலும்...

நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கும் 10 ஆண்டுகளும் – ஒரு பெண்ணுக்காக நாடே எதிர்த்து நின்றது!

நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு பலாத்கார வழக்கு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க நாடு ஒன்று சேர்ந்ததையும் இந்த நாள் நினைவூட்டுகிறது. ஏழு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். டிசம்பர் 16, 2012 அன்று, அந்தக் கொடூரம் நாட்டையே உலுக்கியது. இரவில் தனது தோழியுடன் பஸ்சுக்காக காத்திருந்த 26 வயது மருத்துவ மாணவி ஒருவர் அந்த வழியாக சென்ற பஸ்சில் ஏறினார். அதில் டிரைவர் உட்பட ஆறு பேர்…

மேலும்...

தேசிய கட்சியாக அங்கீகாரம் கிடைப்பது எப்படி?

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சிக்கு வரும் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், கருத்துக் கணிப்புகளின்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 9 முதல் 21 இடங்கள் கிடைக்கும். குஜராத்தில் குறைந்தது இரண்டு இடங்களையாவது பெற்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கும். தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு சில…

மேலும்...

பிடிவாதத்தை கைவிடுகிறாரா சீமான்? – அதீத பரபரப்பில் நாம் தமிழர் தொண்டர்கள்!

திமுகவுடன் கடும் எதிர்ப்பை காட்டி வந்த சீமானின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்வேறு யூகங்களுக்கும், அனுமானங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது. திமுக எதிர் கட்சியாக இருந்தபோதுகூட அதிமுகவை விட்டு, மேடைக்கு மேடை ஸ்டாலினை மட்டுமே சீமான் விமர்சித்து கொண்டே இருப்பார். ஆனால் ஸ்டாலின்…

மேலும்...

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாசிச பாஜக!

பெருந்தொற்றில் சிக்கி நாட்டு மக்களும் நாடும் அலங்கோலப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய குள்ளநரித்தன வேலையில் மட்டும் கவனமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலுள்ள 13 மாவட்ட நிர்வாகங்கள் 1955 குடியுரிமை சட்டப்படி, குடியுரிமை சட்டவிதிகள் 2009 ன் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள சிறுபான்மையினர்களான இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, பார்ஸி மதத்தவர்களிடமிருந்து பதிவு மற்றும் நேச்சுரலைசேசன்…

மேலும்...

பத்ம சேஷாஸ்திரி பள்ளி ஆசிரியரின் காம லீலைகளும் மாணவிகளின் பரபரப்பு கடிதமும்!

பத்ம சேஷாஸ்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலின் காம லீலைகள் குறித்து அடுதடுத்து வரும் தகவல்களை அடுத்து அவர் குற்றத்தை ஒப்புக்கொன்டுள்ளார். சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் பயின்ற மாணவிகள் அளித்த புகாரை அடுத்து அவர் தற்போது கைது செய்யப்படுள்ளார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த வெளியான…

மேலும்...

குமரி மாவட்ட தொகுதிகள் நிலவரம்!

குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளன.   சட்டமன்றத் தொகுதிகள் – கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்.   நாடாளுமன்றத் தொகுதி – கன்னியாகுமரி   சிறுபான்மையின மக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுக்கு அதிகச் செல்வாக்கு இருக்கும் மாவட்டம். அதிமுகவைவிட திமுகவுக்கு அதிக ஆதரவுள்ள மாவட்டம். அதிமுக ஆதரவில் குறிப்பிட்ட அளவு தினகரனுக்கு ஓட்டுகள் பிரியும். முஸ்லிம்களிடையே எஸ் டி பி ஐ…

மேலும்...

பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்!

மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமிப்பது மக்களாட்சியைக் கேலி செய்வதாக இல்லையா? – ராஜன் மதத்தை வைத்து அரசியல் பண்றதை விட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்வதன் பக்கம் எப்போது கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள்? – ரபீக் ராஜா அத்வானிஜியை ஓரங்கட்டியது குறித்து எப்போதேனும் வருந்தியதுண்டா? – பத்மஜா பிரதமர் என்பவர் நாட்டின் அனைத்து மக்களையும் நலமாக வாழ வைக்கும் பொறுப்பில் உள்ளவர். ஆனால் நமது நாட்டில் மதம், ஜாதி பாகுபாட்டால் அற்பகாரணங்களுக்கெல்லாம் அநியாயமாக…

மேலும்...
ரேசன் அரசி சாப்பாடு

புழுத்த அரிசியும் பறிபோன ஆட்சியும் – ஒரு நினைவலை!

இப்போது அரசு இரண்டாம் முறை தந்த வாய்ப்பில், எங்கள் வீட்டு ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிய பின், அரசு வழங்கிய பொங்கல் பரிசாக ₹2500/-, பிரம்பு போன்று மெலிந்த ஒரு கரும்பு, 1 kg அளவுக்குப் பச்சரிசி, 1 kg சீனி, ஆறேழு அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் ஆகியவை கிடைத்தன. — ஒரு வாரம் கழித்து, பொங்கல் வேட்டி கிடைத்தது. ரேஷன் கடைக்காரன் சேலையைப் பதுக்கிவிட்டான் போல. இரண்டில் ஒன்று தான் எனச்சொல்லி விட்டான்….

மேலும்...

வேளாண் சட்டங்களுக்குத் தடை – விவசாயிகள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா?

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி டெல்லியில் கடந்த 49 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தினிடையே 50 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. டெல்லியினுள் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாமல் இருக்க, டெல்லியின் நுழைவாயில் சாலைகள் அனைத்தும் காவல்துறையினரால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் அசராமல் விவசாயிகள் கடுமையான குளிரிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வந்தனர். தாங்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்குபவை தான் என்ற…

மேலும்...