ஒரே வார்த்தை – காத்திருந்த பாஜக – சிக்கலில் தயாநிதி மாறன்!

சென்னை (22 மே 2020): கோட்டையில் தலைமை செயலாளரிடம் நடந்த சந்திப்பு பற்றி சர்ச்சை பேட்டி கொடுத்த தயாநிதி மாறன் சொன்ன ஒரே வார்த்தை பாஜகவுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் காரணம் கிடைத்துள்ளது. சமூக நீதியையும், சுயமரியாதையையும் வலியுறுத்தும் இயக்கமான தி.மு.க.வின் தலைமை குடும்பத்து உறவினரான தயாநிதி இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளிப்பட்டது. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இது பற்றிய தன் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தார். தி.மு.க…

மேலும்...

நீக்கப்படுவாரா தயாநிதி மாறன் – புயலை கிளப்பும் விவகாரம்!

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் கிளப்பிய சலசலப்பு அலை இப்போதைக்கு ஓயாது போல! தயாநிதியைவிடவும் இதில் அதிகமாக சிக்கிக் கொண்டு, பழி சுமப்பவர் திருமாவளவன். திமுக.வுக்காக திருமாவளவன் பாரம் சுமப்பது இது முதல் முறையல்ல. 2009 ஈழ இறுதிப் போர் காலத்தில், அவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது, கலைஞர் வற்புறுத்தலால் ராஜபக்‌ஷேவை சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற்றது, அதன் மூலமாக திமுக மீதான விமர்சனங்களுக்கு கேடயமாக தன்னை ஒப்படைத்தது,…

மேலும்...

ஸ்டாலின் மீதான கிண்டல் எதிரொலி – சன் டிவி தலைமை செய்தியாளர் நீக்கம்!

சென்னை (21 ஏப் 2020): சன் டிவி தலைமை செய்தியாளர் ராஜாவை நீக்கம் செய்து சன் டிவி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறன் பிரதர்ஸ் நடத்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்து வந்த வந்த வாட்ஸ் அப் மீம் ஒளிபரப்பு செய்யப் பட்டதாகவும் இதன் எதிரொலியாக, சன் டிவியின் தலைமை செய்தியாளரான ராஜா நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜா உட்பட மேலும் மூவரும் நீக்கப் பட்டுள்ளதாக ட்விட்டரில்…

மேலும்...

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் தயாநிதி மாறன் ஆதார் இருக்கும்போது மற்ற ஆவணங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார். ஆதார் எண் இருக்கும்போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு எதற்கு என்றும் க்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மேலும் வருமான வரித்துறை விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு ஒரு நீதி, நடிகர் விஜய்-க்கு ஒரு நீதியா? என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

மேலும்...