வெங்காயம், தக்காளி விற்பீர்கள்! கிரிக்கெட் விளையாட மாட்டீர்களா? – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி!

Share this News:

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையில் கூடிய விரைவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையில் வர்த்தகம் நடைபெற்று வருவதையும் மற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டிய அக்தர், ஏன் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் நடத்தப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News:

Leave a Reply