மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

Share this News:

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “உலகக் கோப்பையில் மொராக்கோவைத் தாண்டி யாரும் இல்லை. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். மொராக்கோவின் சிங்கங்கள் அரபுக் கனவை நனவாக்குகின்றன” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.

 


Share this News:

Leave a Reply