19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Share this News:

புதுடெல்லி (29 ஜன 2020): தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தத் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 234 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


Share this News:

Leave a Reply