துபாயில் குடிவரவு அதிகாரிகளுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் வசதி!

Share this News:

துபாய் (12 ஜன 2023): துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வீடியோ அழைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் குடிவரவு அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். துறையின் இணையதளம் மூலம் இந்த புதிய சேவை சாத்தியமாகும்.

பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட் விவரங்களை குறிப்பிட்ட இணையதளத்தில் வழங்குவதன் மூலம் நீங்கள் சில நிமிடங்களில் குடிவரவு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் புதிய விசாக்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் உரிய நேரத்தில் முடிக்க வீடியோ அழைப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், இந்த சேவை ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கும். இதன் முழுநேர சேவையை வழங்க விரைவில் சரிசெய்யப்படும் என்று துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply