முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

Share this News:

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதிக்குச் சென்று இஸ்லாமிய உடையில் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


Share this News:

Leave a Reply